செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் இன்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசுகையில், “இன்றைக்கு இந்த மாநாட்டுப் பந்தலை வானமே வாழ்த்திக் கொண்டிருக்கிறது. சூரியன் எங்குமே இல்லை. சூரியன் மறைந்து போனது. பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார்கள். சூரியன் மறைந்து போனது. தேசிய ஜனநாயக கூட்டம் இங்கே நடைபெறுகிறது. சூரியன் இல்லவே இல்லை. இந்த இயக்கம் மாபெரும் இயக்கம். ஜனசங்கம் காலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது பாரதிய ஜனதா கட்சி.
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் அதிமுக கூட்டாளிகளின் பாட்டாளிகளில் ஒருவராக இன்று நம்மோடு பகை இருந்தாலும் நாங்கள் பகையாளிகள் அல்ல. பங்காளிகள் என்று சொல்லுகின்ற டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரையும் வருக வருக என வரவேற்று அனைவரும் ஒன்றுபட்டு ஒன்றுபடுவோம். கூடுவோம் வெல்வோம். நிச்சயமாக ஆட்சி மாற்றம் உறுதி. நூற்றுக்கு நூறு அதற்கான வேலைகளைப் பிரதமர் நரேந்திர மோடியும், எடப்பாடி பழனிசாமியும் செய்து கொண்டிருக்கிறார்கள். செய்து கொண்டே இருக்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும் இன்றிலிருந்து இந்த சமயத்திலிருந்து அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து நாம் வெற்றி காண வேண்டும்.
தேசிய ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என்பதை நேரத்திலே தெரிவித்துக் கொண்டு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை. சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் முடிவு கட்டுகின்ற நாளாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடைய ஆட்சிக்கு முடிவு கட்டுகின்ற நாளாக இருக்க வேண்டும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். அவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. மக்கள் மீது அக்கறை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்குத் தந்திருக்கிறார். 11 வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்திற்குத் தந்திருக்கிறார். இந்த 11 ஆண்டுக் காலத்தில் 14 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்குத் தந்த மாபெரும் தலைவர் நரேந்திர மோடியின் புகழ் ஓங்குக” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/23/nda-meeting-nainar-2026-01-23-16-28-09.jpg)