Advertisment

“நீதிமன்ற வளாகத்தில் நீதியரசருக்கே பாதுகாப்பில்லாத நிலை” - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

nainar-nagendran-mic

கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த ஆண்டு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதாவது அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பாலமுருகனு்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், நீதிபதி சுதாகர் மீது அரிவாளை வீசியுள்ளார். 

Advertisment

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாலமுருகனை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்திற்குள் நீதிபதி மீது அரிவாள் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொட்ர்பாக அவர்  ‘திமுக ஆட்சியில் நீதிமன்றத்திலேயே காணாமல் போன சட்டம் ஒழுங்கு!’ எனக் குறிப்பிட்டுப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Advertisment

அதில், “விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில், நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சி முடிய இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கிறது என்று மக்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அந்த நிம்மதியைக் கூட நீடிக்க விடாது, தினந்தோறும் தினுசு தினுசான குற்றங்கள் நடந்து, தமிழக மக்களின் அச்சத்தை மேன்மேலும் கூட்டுகின்றன.

cm-mks-sad

பட்டப்பகலில் காவலர்களும் வழக்கறிஞர்களும் சூழ்ந்திருக்கும் நீதிமன்ற வளாகத்தில் நீதியரசருக்கே பாதுகாப்பில்லாத நிலையில், பாமர மக்களுக்கு எப்படி பாதுகாப்பிருக்கும்?. ஆட்சியின் இறுதிகட்ட நாட்கள் வரை வெற்று விளம்பர அறிவிப்புகளை வெளியிடுவதில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு, சட்டம் ஒழுங்கைக் கடைக்கண் கொண்டுகூட கவனிக்காத திமுக அரசைத் தப்பித்தவறி கூட மீண்டுமொரு முறை ஆட்சி அமைக்க விடமாட்டார்கள் தமிழக மக்கள்” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். 

dmk govt nainar nagendran b.j.p Judge court Virudhunagar Srivilliputhur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe