மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று (23.12.2025) சென்னைக்கு வருகை தந்துள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடன், பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பாஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டியில், “பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயில் மற்றும் அர்ஜுன் மெகாவலும் இன்று தமிழகம் வந்துள்ளனர். அதன்படி காலையில் கமலாலயத்தில் பாஜக மூத்த நிர்வாகிகளை முதலில் சந்தித்துப் பேசினார்கள். 

Advertisment

அவ்வாறு சந்தித்துப் பேசும்போது தமிழ்நாட்டில் இன்றைக்குக் கள நிலவரம் எப்படி இருக்கிறது?. தேர்தல் களம் எப்படி இருக்கிறது?. என்று விவாதித்தார்கள். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசி இருக்கிறோம். தொகுதிப் பங்கீடு விஷயமாக எதுவும் பேசவில்லை. இன்றைக்கு முதல் கட்டமாகக் கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் சொன்னோம் மீடியா எல்லாம் ரெடியாக இருக்கிறது. திமுக கூட்டணியும் ரெடியாக இருக்கிறது. நாங்களும் ரெடியாக இருக்கிறோம். மக்கள் இன்னும் தயாராகவில்லை. மக்கள் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று இன்னும் தயாராகவில்லை என்பது போன்று விவாதம் செய்தோம். 

Advertisment

இன்றைக்கு நாங்கள் பொதுவாக என்ன நிலவரம் எப்படி இருக்கிறது?. கடந்த சட்டமன்ற தேர்தல் எப்படி நடந்தது?. எவ்வளவு ஓட்டு வாங்கி இருக்கிறோம்?. பாராளுமன்ற தேர்தல் எப்படி நடந்தது? அதன் வாக்கு சதவீதம் எவ்வளவு? அந்த மாதிரிதான் பேசினோம். தேர்தலை பொறுத்தவரையில் இன்றைக்குத் தமிழ்நாட்டில் திமுக அகற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொண்டே இருப்பது ஒத்த கருத்துடைய எல்லாரும் ஒன்று சேர வேண்டும் என்பது தான். ஒரு காலத்தில் இந்திரா காந்தி அம்மையார் மதுரைக்கு வந்தார்கள். அப்போது திமுககாரர்கள் எல்லாம் கருப்புக் கொடி போராட்டம் என்ற பெயரில்  அவர் மீது கல் வைத்து அடித்தார்கள். அதில், இந்திரா காந்திக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வந்தது. அதனை திமுகவினர்  கொச்சைப்படுத்திப் பேசினார்கள். அதன் பிறகு ஆறு மாதத்தில்  நடைபெற்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியே வைத்தார்கள். எனவே அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர பகைவர்களும் இல்லை. அதாவது விஜய்

eps-piush-koyal

ஸ்பாய்லர்னு எப்படிச் சொல்ல முடியும்?. யாருக்கு ஸ்பாயில் பண்றாருன்னு யார் சொல்ல முடியும்?. இன்னும் தேர்தலுக்குச் சரியாக 3 மாதம் இருக்கிறது. ஜனவரி, பிப்ரவரி மார்ச் என 3 மாதம் முழுமையாக முடியவில்லை. இன்னும் நாட்கள் நிறைய இருக்கிறது. அதனால் யார் யார் பக்கம் இருக்கிறார்கள். யாருடன் கூட்டணி சேர்கிறார்கள் இதையெல்லாம் பொறுத்து திமுகவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த ஆன்டி எங்கசி ஓட் இது எவ்வளவு தூரம் வருகிறது என்பதைப்  பொறுத்து யார் வாங்குகிறார்கள் என்பதை பொறுத்துத்தான் அதெல்லாம் சொல்ல முடியும்...... தை பிறந்தால் வழி பிறக்கும் என்று  சொல்லுவார்கள்” எனப் பேசினார்.

Advertisment