தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலை நிமிரத் தமிழனின் பயண யாத்திரையின் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று (04.01.2026) நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமித்ஷா பங்கேற்றார். அதில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “தமிழகம் தலைநிமிரத் தமிழனின் எழுச்சி பயணத்தின் இது இறுதி யாத்திரை என்று யாரும் நினைத்து விடக் கூடாது.
இனிமேல்தான் துவக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். இன்றிலிருந்து சபதம் ஏற்க வேண்டும். என்ன சபதம்?. இந்த ஆட்சி அகற்றப்படும் வரை இன்றிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு அனைவரும் இன்றிலிருந்து விரதம் இருப்பது போல் மூன்று மாதங்கள் விரதம் இருந்து ஆட்சி அகற்றுவதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும் என்றுதான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 50 சதவீதம் போக்சோ குற்றங்கள் 60 சதவீதம் இன்னும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிலும் 10 வயதுக் குழந்தைகள் முதல் 70 வயது பெண்கள் வரையிலும் உள்ளது. ரோட்டில் நடமாட முடியவில்லை.
கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்தும் இந்த ஆட்சியில் நடைபெறுகிறது. யார் செய்கிறார்கள்? என்று சொன்னால் அனைத்தையும் செய்வது திமுகவைச் சேர்ந்தவர்கள் இதனைச் செய்கிறார்கள். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல். யார் செய்கிறார்கள் இதை திமுக அமைச்சர்களே செய்கிறார்கள். செந்தில் பாலாஜி டாஸ்மாக் அமைச்சராக இருந்தார் இப்போது அமைச்சராக இல்லை. திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் பெண்களைத் தவறாகப் பேசுகிறார்கள். திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் பெண்களை ஏளனமாக்கப் பேசுகிறார்கள். விழுப்புரத்திலே ஒரு அமைச்சர் (முன்னாள்) பெண்களைப் பார்த்து நீங்கள் நின்றால் எவ்வளவு?. ப@த்தால் எவ்வளவு என்று கேட்கக்கூடிய அளவிற்குத் தாய்மார்களை மதிக்கத் தெரியாத ஒரு தரங்கெட்ட அமைச்சர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/04/nainar-speak-2026-01-04-22-22-30.jpg)