Advertisment

“தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல்” - மதுரையில் நயினார் நாகேந்திரன் பேச்சு!

nainarm

Nayinar Nagendran said The election between Dharma and Adharma

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மதுரை மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று (01-26) மாநாடு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisment

இந்த மாநாட்டில் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “இன்றைய ஆட்சியில், கையில் புத்தகத்தை எடுக்கும் மாணவர்கள், கஞ்சாவை எடுத்திருக்கிறார்கள். இதற்கு முதல்வர் ஸ்டாலினின் தவறான ஆட்சி தான் காரணம். சனாதன தர்மத்தை அழிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்ன்னார். அவ்வளவு மோசமான ஆட்சி நடக்கிறது. 2 வயது பெண் குழந்தைகள் முதல் 70 வயது பெரியவர் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்த அவலங்கள் எல்லாம் ஸ்டாலினின் ஆட்சியில் தான் நடக்கிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. அதற்காக இந்த தேர்தல் நடக்கிறது.

Advertisment

இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். இதில் தர்மம் வெல்ல வேண்டும். அதற்காக ஒருங்கிணைந்த கூட்டம் தான், இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி. இதில் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம், வெல்வோம்” என்று கூறினார். 

NDA madurai nainar nagendran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe