வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே ஆயத்தமாகி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரை மற்றும் கூட்டணி கணக்குகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஜெ.பி.நட்டாவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

Advertisment

டெல்லியில் காரில் அமர்ந்தபடி செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் டெல்லி வருகை மற்றும் நட்டாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''அக்டோபர் 12ஆம் தேதியிலிருந்து மக்களை சந்திக்கும் பிரயாணத்தை தொடங்க இருக்கிறேன். தொடங்கி வைப்பதற்கு அவரை அழைத்துச் செல்வதற்காக வந்தேன். முடிந்த வரை நான் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆறாம் தேதி சென்னைக்கு வருவதாக இருக்கிறது. எம்ஜிஆர் மெடிக்கல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிறார். அதைத் தொடர்ந்து ஏழாம் தேதி பாண்டிச்சேரி போகிறார். அதேநேரம் 12ஆம் தேதி இங்கே வந்து என்னுடைய தேர்தல் பரப்புரை சுற்றுப்பயண தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் எனச் சொல்லி கோரிக்கை வைத்தேன். நான் நாளைக்கு ஊருக்கு போகிறேன். அமித்ஷாவை சந்திக்கவில்லை''என்றார்.