Advertisment

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

amit-shah-nainar

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. அதே சமயம், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையமும் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பணிகள் மூலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 10ஆம் தேதி (10.12.2025) நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 11ஆம் தேதி (11.12.2025) சந்தித்து பேசியிருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி இருக்கிறார். அதற்காக சந்தித்து அவரை வாழ்த்திவிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக வந்தேன்” என்றார்.

Advertisment

இந்நிலையில் டெல்லியில் உள்ள கிருஷ்ணமேனு சாலையில் அமைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் இல்லத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (14.12.2025) சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி நிலவரம், தொகுதி பங்கீடு மற்றும் தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பான பல்வேறு முடிவுகள் குறித்து  ஆலோசனை நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

amit-shah-tn-mic-our0hand

அதோடு அமித்ஷாவின் தமிழகம் வருகை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவின் கோரிக்கைகள், நிபந்தனைகள் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் விளக்கியதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று (13.12.2025) இரவு டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் பல்வேறு கோரிக்கை மனுக்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மதராமனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை (15.12.2025) தமிழகம் வர உள்ளார். அதன்படி சென்னை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு கட்சிகளை கூட்டணியில் இணைக்க அமித்ஷா முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சென்னையில் இருந்து வேலூர் செல்லும் அமைச்சர் அமித்ஷா அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.

admk b.j.p Delhi edappadi k palaniswami nainar nagendran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe