தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (04-02-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது. இன்னும் நிறைய கூட்டணிகள் வர இருக்கிறது. என்.டி.ஏ கூட்டணி வர வர வலிமையாகி வருகிறது. பல கருத்துக் கணிப்புகளில் கூட என்.டி.ஏ ஆட்சி தான் அடுத்த ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு வலிமையாக இருக்கிறது. இன்னும் சில கட்சிகள் வர இருக்கிறது. பலகட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக உறுதியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். மக்களுக்காக தலைவர் என்றால் அதற்கென்று ஒரு தகுதியை வளர்த்து கொள்ள வேண்டியது தம்பி விஜய்யுடைய ஒரு கடமை. ஆடலாம் தியேட்டரில் ஆடலாம் அது வேறு விஷயம். ஆனால், ஒரு கட்சி தலைவராக இருந்து கொண்டு கட்சியுடைய ஆண்டு விழாவில் ஆடுவது தான் உங்களுடைய கொள்கை என்றால் இவர்களெல்லாம் நாளைக்கு மக்களுக்காக என்ன செய்ய முடியும்? இவர்களால் எந்த நல்லதும் செய்ய முடியாது. ஒரு கூட்டத்தை கூட்டலாம் அவ்வளவு தான். எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/04/naivj-2026-02-04-22-10-18.jpg)