தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
நேற்று கோவை ஈஷாவில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியில் பாஜகவின் எல்.முருகன், அதிமுகவின் வேலுமணி மற்றும் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்தநிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் எல். முருகன் ஆகியோர் சந்தித்துள்ளனர். சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில் அதற்குள் கூட்டணியை இறுதி செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமி உடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்ப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/16/b28-2026-02-16-21-27-18.jpg)