இந்தியா முழுவதும் வரும் 21ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையையொட்டி, புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்கி தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை காலத்தில் இந்து கடைக்காரர்களிடம் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ சங்க்ராம் ஜக்தாப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பேரணியில் பங்கேற்று பேசிய எம்.எல்.ஏ சங்க்ராம் ஜக்தாப், “தீபாவளி பண்டிகையின்போது, ​​ஒவ்வொரு குடிமகனும் இந்துக்களுக்குச் சொந்தமான கடைகளில் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். இந்த விற்பனையில் இந்துக்கள் மட்டுமே லாபம் ஈட்ட வேண்டும். தற்போது, ​​மசூதிகளில் இருந்து இந்துக்கள் மீதான தாக்குதல்கள் நடந்து வருகின்றன” என்று கூறினார். சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சங்க்ராம் ஜக்தாபுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

Advertisment

இதையடுத்து, எம்எல்ஏ சங்க்ராம் ஜக்தாபுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கும் நோட்டீஸ் அனுப்பும் என மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் தெரிவித்துள்ளார். இது குறித்து அஜித் பவார் கூறியதாவது, “ஜக்தாப்பின் இந்த அறிக்கை முற்றிலும் தவறானது. கட்சியின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த எம்.எல்.ஏவும் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடக்கூடாது. இது கட்சிக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. நாங்கள் அவருக்கு விளக்கம் அளிக்கும் நோட்டீஸ் அனுப்புவோம். அருங்ககா ஜக்தாப் (சங்ராம் ஜக்தாப்பின் தந்தை) உயிருடன் இருக்கும் வரை, அஹில்யானநகரில் எல்லாம் நன்றாக இருந்தது. நாங்கள் கூடுதல் சுமையை உணர்கிறோம். சிலர் தங்கள் தந்தையின் ஆதரவு இல்லாத நிலையில், அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.