சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதாகச் செய்திகள் வெளியாகின. அதோடு, சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த செய்திகள் வெளியானதையடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், அது விபத்து அல்ல வெறும் ஒத்திகை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரயில் தடம் புரண்டது போல் ஒத்திகை பார்த்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து நேர்ந்தால் துரிதமாகச் செயல்படுவது குறித்து தேசிய மீட்புப் படையினருக்குப் பயிற்சி அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள், ஆண்டுதோறும் இது போன்று விபத்து ஒத்திகையில் ஈடுபடுவது வழக்கம் தான் என்று விளக்கம் அளித்துள்ளனர். விபத்து நேரும் காலங்களில் எவ்வாறு துரிதமாகச் செயல்படுவது மற்றும் பயணிகளை மீட்பது என்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.