இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி தேசிய பத்திரிகை தினம் (National Press Day) கொண்டாடப்படுகிறது. அதாவது இந்திய பத்திரிகை கவுன்சில் (Press Council of India) நிறுவப்பட்ட தினத்தைக் (16.11.1966) குறிக்கும் வகையில் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினமானது பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பத்திரிகைத் துறையின் பொறுப்புகளை நினைவூட்டவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “எந்தவொரு ஜனநாயகத்திலும், அதிகாரத்தில் இருப்பவர்களால் நிறுவனங்கள் வளைக்கப்படலாம் அல்லது கைப்பற்றப்படலாம். ஆனால் பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.
மத்திய பாஜக அரசின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து, அதன் தோல்விகள், ஊழல் செயல்கள் மற்றும் வஞ்சகத்தை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு பத்திரிகையாளரையும், தேசிய பத்திரிகை தினத்தில் நான் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/16/cm-mks-1-2025-11-16-12-02-09.jpg)