ஏ.ஐ. வருகையானது  தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், ஏ.ஐ. ஆனது எதிர்காலத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும். அதனால், அத்துறையில் பல்லாயிரக்கணக்கானோர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு துறைகளில், பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானோரைப் பணி நீக்கம் செய்தது. 

Advertisment

இதனால், ஐ.டி துறையில் உள்ளவர்கள் பலரும் தங்களின் வேலையின் உறுதித்தன்மை குறித்து, பெரும் கவலையில் இருந்து வருகின்றனர். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை. எனவே, இது பற்றி கவலைப் படத் தேவை இல்லை என்று தொழில்நுட்ப துறை அமைப்பான "நாஸ்காம்" நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, ஏ.ஐ வரவால் இந்தியத் தொழில் நுட்பத்துறை பாதிக்கப்படும் என்று கூறுவது ஆதாரமற்றது. மாறாக ஏ.ஐ. வரவானது ஐ.டி துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும். மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகளைத் திறன் மிக்கதாக மாற்றும். 

Advertisment

குறிப்பாக, "கிளாட் கோவர்க்" போன்ற புதிய ஏ.ஐ தொழில்நுட்பம் பல்வேறு பணிகளைத் தன்னிச்சையாக மேற்கொள்ள உதவும். ஆனால், இதன் காரணமாக வேலையிழப்பு ஏற்படும் என்பது உண்மையில்லை. மாறாக, இந்தியத் தொழில் நுட்பத் துறையில் ஏ.ஐ  தொழில் நுட்பம் பணிகளின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும். எனவே, ஏ.ஐ தொழில்நுட்பத்தால் இந்தியத் தொழில் நுட்பத்துறைக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது ஒரு தவறான புரிதல்.

ஏற்கனவே, சிக்கலான சூழலில் இயங்கி வரும் சில உலகளாவிய தொழில் நுட்ப நிறுவனங்களுடன் இந்தியத் தொழில் நுட்பத்துறை இணைந்து செயல்பட்டுவருகிறது.  காலத்திற்கு ஏற்ப அடுத்தகட்டத்திற்கு நகர வேண்டி உள்ளதால், தங்களைச் சீரமைக்கும் பணிகளை ஏற்கனவே இந்திய ஐ.டி துறையில் உள்ள நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. எனவே, ஏ.ஐ வருகை என்பது ஐ.டி துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தேவையற்ற வதந்திகள் என்று கூறப்படுகிறது. 

Advertisment