Nanjil Sampath's speech before TVK Leader Vijay
தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று (25-01-26) சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மாநில மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கியதை அடுத்து, இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தவெக கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த கூட்டத்தில் பேசிய தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத், “செந்தமிழ் காக்க இனி ஒரு சேனை தேவைப்படுமானால், அந்த சேனையை தருகிற இயக்கம் எங்கள் தளபதியின் தவெக தான். அந்த சேனை எங்களிடம் தான் இருக்கிறது. இந்தியை எதிர்ப்பதாக நீங்கள் நாடகம் போடுகிறீர்கள். 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் இருக்கிறார்கள். ஜனநாயகமற்ற நாடு, நாகரிகமற்ற மக்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசினார். நீங்கள் என்ன எதிர்வினையாற்றினீர்கள்? டெல்லியோடு மோத, டெல்லியோடு யுத்தம் செய்ய, டெல்லியில் குவிந்து கிடக்கிற அதிகாரத்தை உடைத்து நொறுக்கிற படைத்திறன் தான் ஒரு எம்.பி. அந்த கடமையை நீங்கள் செய்தீர்களா?
நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது, உங்கள் நாடகம் முடிவுக்கு வரப்போகிறது. வருகிற காலம் நம்முடைய காலம். விஜய் பேசுவதில்லை, ஆனால் அவரை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்” என்று பேசினார்.
Follow Us