திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் உள்ள தேநீர் கடைக்கு வெளியே நேற்று (02.03.2026) இரவு சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று, தேர்நீர் கடை மீது மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, அரிவாளால் கண்மூடித்தனமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் ஜான் மார்க் (வயது 50) என்ற மாற்றுத்திறனாளி மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி ஒருவர் என இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் நெல்சன், பிரபாகரன், ராமசாமி, கணேசன் மற்றும் சசிகுமார் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து 6 பேரும் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கஞ்சா போதையில் இந்த கும்பல் தாக்குதலை நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள அதே சமயம், இது சாதிய மோதல் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கு நிலவி வரும் பதற்றம் காரணமாக நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்து அதிமுக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/03/siren-arrested-2026-03-03-12-07-44.jpg)