கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும், பெங்களூரைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தனது கணவர் மற்றும் தங்களது இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் ராஜாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விரியூர் கிராமத்தில் உள்ள பிசியோதெரபி மருத்துவரிடம் மருத்துவ பரிசோதனைக்கு தனது கணவரை அழைத்துச் சென்ற போது நந்தினிக்கும் மருத்துவர் மரியாரோசாரியாவிற்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் உடல்நிலை குறைவு காரணமாக ராஜா உயிரிழந்த நிலையில் தனக்கு மற்றொரு திருமணம் செய்ய வேண்டும் என்ற நிலையில் நந்தினி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரியாரோசாரியாவின் குடும்பத்தினருக்கு தெரியாமல் மரியாரோசாரியா மற்றும் நந்தினி இருவரும் திருமணம் செய்து கொண்டு வேறொரு கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. இந்த விவகாரம் மரியாரோசாரியோவின் தாய் கிறிஸ்துவ மேரிக்கு தெரிய வந்த நிலையில் நந்தினியை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் முதலில் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது மருமகளை ஏற்றுக் கொண்டது போல அவருடன் நன்கு பழகி வந்த கிறிஸ்தவ மேரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது மகனிடம் மருமகளுக்கு சடங்கு செய்ய வேண்டும் என்று கூறி சங்கராபுரம் அருகேயுள்ள சோழம்பட்டு பகுதியில் அழகாபுரம் செல்லும் சாலையில் மணிமுக்தா ஆற்றின் கரையோரம் அழைத்துச் சென்று இடத்தை தேர்வு செய்து விட்டு தற்போது நாள் சரியில்லை மற்றொரு நாளில் வரலாம் என கூறிவிட்டு அங்கிருந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது மகனிடம் மருமகளை சடங்கு செய்வதற்கு அழைத்துச் சென்றதாக கூறிவிட்டு கிறிஸ்துவ மேரி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

Advertisment

அதன் பிறகு நந்தினி வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த மரிய ரோசாரியோ இதுகுறித்து தனது தாய் கிறித்துவமேரியிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த நந்தினியின் இரண்டாவது கணவர் மரியாரோசாரியோ நந்தினியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் என வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரினை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் முதற்கட்டமாக மருமகளை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற மாமியார் கிறிஸ்தவ மேரியை சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நள்ளிரவில் விசாரணை மேற்கொண்டதில் அவர் பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார்.

inves-1

நந்தினியும் மரிய ரோசாரியோ ஆகிய இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்தது பிடிக்கவில்லை எனவும், நந்தினியின் மாமனார் சாலமன் மற்றும் மாமியார் கிறிஸ்துவமேரி நந்தினியை கண்டித்ததாகவும், அவர்கள் தனி குடித்தனம் நடத்தி வந்த நிலையில் இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தையும் இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை பிறந்தது அறிந்த சாலமான் மருமகள் நந்தினியை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவ மேரி மட்டும் மருமகளை ஏற்றுக் கொள்ளாமல் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் நந்தினிக்கும் மாமியார் கிறிஸ்தவமேரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில் மருமகள் நந்தினியை கொலை செய்ய கிறிஸ்துவ மேரி திட்டமிட்டதாக தெரியவந்தது.

Advertisment

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நந்தினியை மாமியார் கிறிஸ்து மேரி ஏற்றுக்கொண்டது போல் ஒரு நாடகம் ஆடி நந்தினி இடம் சிரிச்சு மகிழுந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாமியார் நம்மளை ஏற்றுக் கொண்டதாக நந்தினி நம்பி மகிழ்ச்சியாக பழகி வந்துள்ளார். திடீரென நந்தினியிடம் கிறிஸ்துமேரி வந்து நமக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதற்கு காரணம் நமக்குள் ராசி, ஜாதகம் சரியில்லை ஆகையால் நாம் இருவரும் சேர்ந்து ஒரு சடங்கு செய்ய வேண்டும் என கிறிஸ்தவ மேரி நந்தினியிடம் கூறியுள்ளார். அதை நம்பிய நந்தினி சரி அத்தை அப்படியே செய்யலாம் என்று கூறியுள்ளார்.

arrest

இதை அடுத்து நந்தினியை அருகில் உள்ள சோழம்பட்டு - அழகாபுரம் கிராமத்திற்கு இடையே உள்ள மணிநதி ஆற்றுப்பகுதிக்கு சென்று சடங்கு செய்யலாம் என்று முடிவு செய்து 2 நாட்களுக்கு முன்பு நந்தினியை ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு நந்தினியை கிறிஸ்துவமேரி மற்றும் அவருடைய பெண் தோழி எமிலி ஆகியோர் சேர்ந்து நந்தினியை கடுமையாக தாக்கி நந்தினி கை கால்களை கட்டி போட்டு நந்தினி கழுத்தை அறுத்து தலையை துண்டித்து கொலை செய்து அருகில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் தலையை ஒரு இடத்திலும் உடல் பாகங்களை மற்றோர் இடத்திலும் புதைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. 

இந்த விசாரணை அடிப்படையில் நந்தினியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மருமகளை கொலை செய்த மாமியார் மற்றும் அவருடன் உடந்தையாக இருந்த தோழி எமிலி ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.