"கிராமப்புற மக்களிடமும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' செயல்படுத்தப்பட்டுள்ளது" - நடிகை சமீரா ரெட்டி பாராட்டு

B

சென்​னை​யில் நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக.2-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் வாயிலாக சாதாரண ரத்தப் பரிசோதனைகள் தொடங்கி சர்க்​கரை நோய், இருதய நோய் என எல்லாவிதமான பரிசோதனையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளலாம். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள முடியும். இந்த முகாம்களில் தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை சமீரா ரெட்டி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நோயின் தீவிரத்தை வெகு விரைவாகவே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் சரியான வேலையில் முறையான சிகிச்சை அளிக்க முடியும். கிராமப்புற மக்களிடமும் நவீன மருத்துவ சேவை சென்றடையும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் பொருளாதார தடை இன்றி அனைத்து மக்களும் இலவசமாக பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டக்கூடியது என புகழ்ந்துள்ளார்.

medical camp sameera reddy stalin
இதையும் படியுங்கள்
Subscribe