Advertisment

நயினார் நாகேந்திரனின் டெல்லி பயணம்- எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு

a5786

Nainar Nagendran's trip to Delhi - a surprise meeting with Edappadi Photograph: (bjp)

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. அதே சமயம் , சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையமும் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பணிகள் மூலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. 
Advertisment
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19 உட்பிரிவு 7 மற்றும் 25 உட்பிரிவு 2 இன்படி, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று  நடைபெற்றிருந்தது. இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார்.
Advertisment
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''நேற்று அதிமுக பொதுக்குழு நடந்தது. பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி இருக்கிறார். அதற்காக சந்தித்து அவரை வாழ்த்திவிட்டு வாழ்த்துக்களை தெரிவதற்காக வந்தேன்'' என்றார்.
'டிடிவி, ஓபிஎஸ் கூட்டணிக்குள் கொண்டு வருவதைப் பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் ஏதாவது பேசுனீங்களா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ''இல்லை நாங்கள் கூட்டணி பற்றி எதுவுமே பேசவில்லை. கூட்டணி பற்றியோ, தொகுதிப் பங்கீடு பற்றியோ நாங்கள் எதுவும் பேசவில்லை. பொதுக்குழுவில் நடந்த விவரங்களைப் பற்றி மட்டும்தான் பேசினோம். டெல்லிக்கு இனிமேல் தான்  நாளை கழிச்சு தான் போறோம்'' என்றார்.
நேற்று முன்தினம் பாஜக முன்னாள் மாநில தலைவர் டிடிவி, தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதேநேரம் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் மேலும் பல கட்சிகளை கொண்டு வர இனி முனைப்பு காட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கதாக  உள்ளது.   
admk b.j.p edappaadipalanisamy nainar nagendran
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe