தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய், தனது முதல் மாநாட்டின் போதே பா.ஜ.கவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் பிரகடனப்படுத்தினார். அதற்கு வழிவகுக்கும் விதமாக, பா.ஜ.கவுக்கு பிடிக்காத தந்தை பெரியாரை தனது கொள்கைத் தலைவராக விஜய் அறிவித்தார். இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தவெக வர வேண்டும் என பா.ஜ.கவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனிடையே விஜய், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது. இதனிடையே விஜய், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டாலும், பா.ஜ.கவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததாலும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இருப்பினும் திமுக அரசை வீழ்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தவெக வர வேண்டும் என அதிமுக, பா.ஜ.க ஆகிய கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு, அதிமுகவுடன் விஜய் கூட்டணி வருவார் என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் நம்பியிருந்த வேளையில், சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், தவெக தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இது அதிமுகவிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல், திமுக - தவெக இடையில் தான் போட்டி என்று விஜய் கூறியிருப்பது விந்தையாக இருக்கிறது என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், தவெகவை குறைத்து மதிப்பிடவில்லை என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நயினார் நாகேந்திரனிடம் விஜய்யின் நிலைப்பாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. தேர்தல் வர இன்னும் காலங்கள் இருக்கிறது. அரசியலில் நிரந்திர நண்பரும், கிடையாது நிரந்தர பகைவரும் கிடையாது. ஒரு கவுன்சிலர் கூட அவரது கட்சியில் இல்லை. எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும். நான் தவெகவை குறைத்து மதிப்படவில்லை” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/13/vijaynayinar-2025-11-13-20-18-44.jpg)