Advertisment

“கரூர் சம்பவத்திற்கு யார் காரணம்?” - நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

karur-stampede-nainar

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலை நிமிரத் தமிழனின் பயண யாத்திரையின் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று (04.01.2026) நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமித்ஷா பங்கேற்றார். அதில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “அமைச்சர் சேகர்பாபு கோயிலுக்கு வந்தவர்களை அநாகரிகமாகப் பேசுகிறார். தமிழிசை சௌந்தரராஜன் போகும்போது கூட அவர்கள் கேவலமாக நடந்து கொண்டார்கள். அவர்கள் மதிக்கத் தெரியாதவர்கள் தமிழகத்தின் தமிழ்க் கலாச்சாரத்தை நேசிக்கத் தெரியாதவர்கள் ஆவார்கள். 

Advertisment

கரூரிலே ஒரு சம்பவம் நடந்தது. 41 பேர் இறந்து போனார்கள். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 12 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு 7 மணிக்கு வருகிறார். ஆனால் நடந்தது என்ன?. அங்கே 41 பேர் இறந்து போனார்கள். உடனடியாக இரவோடு இரவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு வருகிறார். 41 பேருக்கும் போஸ்ட்மார்டம் (பிரேதப் பரிசோதனை) செய்யப்படுகிறது. யாரைக் காப்பாற்றுவதற்காக?. கரூரில் இருக்கிற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காப்பாற்றுவதற்காக. அத்தனைக்கும் காரணம் அந்த சாவுக்குக் காரணம் செந்தில் பாலாஜி என்பதை இந்த மேடையில் நான் பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகிறேன். 

Advertisment

இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் உண்டு. வருகின்ற தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் நடைபெறுகிற ஆட்சி மாற்றத்தில் அனைவருக்கும் நீதிமன்றம் செல்வார்கள் என்பதைக் கூற இந்த நேரத்தில் நான் கடமைப்பட்டிருக்கிறேன். கள்ளச்சாராயத்தில் கள்ளக்குறிச்சியில் 65 பேர் இறந்து போனார்கள். திமுகவைச் சேர்ந்தவர்கள் அங்கே குற்றவாளிகளாக இருக்கிறார்கள். விழுப்புரத்தில் 17 பேர் இறந்து போனார்கள். கள்ளச் சாராயம், போதைப் பொருட்கள், எங்குப் பார்த்தாலும் போதைப் பொருட்கள். பள்ளிக்கூட வாசலிலே போதைப் பொருள். ஆசிரியர்களே போதை போட்டுக் கொண்டு போகிறார்கள். மாணவர்கள் போதை போட்டுக் கொண்டு ஆசிரியர்களைத் தாக்குகிறார்கள். இது மாதிரி  சம்பவம் இந்த திமுக ஆட்சியில் தான், மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கக் கூடிய இந்த ஆட்சியில் தான் இப்படி நடைபெறுகிறது” எனப் பேசினார்.

Amit shah b.j.p nainar nagendran pudukkottai V. Senthil Balaji karur stampede
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe