சென்னை வடபழனியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (07-12-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “முதல்வரை பார்க்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நான் முதல்வரை பல கோணங்களில் பார்த்திருக்கிறேன். என்னை பொறுத்தவரைக்கும் அவர் சிறந்த நல்ல மனிதர். ஆனால் அவருடைய ஆட்சியை என்னால் அப்படி சொல்ல முடியவில்லை. இஸ்லாமிய மக்களோடு நாங்கள் மாமன் மச்சானாக பழகிட்டு இருக்கோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதோ அந்த சட்டத்தின் அடிப்படையில் தீபம் ஏற்றுவதற்கு எங்களை அனுமதிருக்க வேண்டும்.

Advertisment

மாறாக நீதிமன்ற தீர்ப்பு முடிந்த பிறகு 144 தடை உத்தரவை போட்டிருப்பது என்பது நீதிமன்றத்தை அவமதிப்பாகும். அது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் மாபெரும் தவறு. அந்த சட்டத்திற்கு உட்பட்டு அவர் தவறு செய்தவர்களாக கருதப்படுவார்கள். தீபம் ஏற்றப்படுவதால் எந்த இஸ்லாமிய மக்களுக்கு எந்தவித வருத்தமும் இல்லை. இன்னும் 60, 70 நாட்களில் வரக்கூடிய தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு வாக்கு வங்கிக்காக முதல்வர் வைத்து பேசுகிறார்” என்று பேசினார். 

Advertisment