Nainar Nagendran says There is nothing wrong with Tamil Nadu coming up with a model like Ayodhya
சட்ட மாமேதை பாபாசாகேப் அம்பேத்கரின் 67வது நினைவு நாள் இன்று (06.12.2025) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, அம்பேத்கரின் புகைப்படம் மற்றும் திருவுருவச்சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இந்த தினத்தை முன்னிட்டு தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பா.ஜ.க தொண்டர்களுடன் சென்னையில் பேரணியாகச் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு பா.ஜ.க முயற்சிப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. அதனால் அயோத்தி மாதிரி தமிழகம் வருவதில் தப்பில்லை. ராமருடைய ஆட்சியை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எப்படியாக இருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி ராமருடைய ஆட்சி போல் வர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தர்காவிற்கு செல்லாம் அதற்கு அருகில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், அந்த தர்கா சம்பந்தப்பட்டவர்களோ, எந்த இஸ்லாமியர்களோ அந்த தீர்ப்பை எதிர்த்தை ஒருத்தர் கூட வரவில்லை. இதில் மதக்கலவரம் வருவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை அழித்துவிடுவோம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்கு ஆரம்பகட்ட வேலையில் ஈடுபடுகிறார் என்று நினைக்கிறேன். அவருடைய கனவு பலிக்காது. அவருடைய காலத்தில் இல்லை, எத்தனை ஆண்டு காலமானாலும் சரி, எத்தனை யுகங்கள் ஆனாலும் சரி சனாதன தர்மத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறினார்.
Follow Us