20 லட்சம் மக்கள் தொகை இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. மேலும், கோவையில் 15.84 லட்சம், மதுரையில் 15 லட்சம் மட்டுமே மக்கள் தொகை இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. அதே சமயம் மக்கள் தொகை குறைவாகவுள்ள ஆக்ரா, நாக்பூர், புனே மற்றும் கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2026 ஜூனில் கோவைக்கு மெட்ரோ ரயில் வரும் என தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “‘கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் கொண்டு வரவில்லை. மத்திய அரசு நிராகரித்து விட்டது. மதுரையில் மெட்ரோ ரயில் நாங்கள் டி.பி.ஆர். ரிப்போர்ட் கொடுத்தோம் மத்திய அரசு நிராகரித்து விட்டது’ என்று சொல்லி கொண்டே இருக்கிறார்கள். அப்படி என்றால் திருநெல்வேலிக்கு ஏன் அவர்கள் கொடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையில் திருநெல்வேலிக்கு மெட்ரோ திட்டம் கொண்டு வருவோம் என்று சொல்லி இருந்தாங்களே?.
திருநெல்வேலி மக்கள் மட்டும் என்ன புறக்கணிக்கப்பட்டவர்களா?. அல்லது திமுகவுக்கு ஓட்டு போடவில்லையா. ஓட்டு போடவில்லை என்பதுதான் நோக்கமே தவிர கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள். தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள். ஆகவே திமுகவுக்கு வாக்களிக்கவில்லை அதனால் டி.பி.ஆர். ரிப்போர்ட்டை வேண்டுமென்றே குறைத்து குறைத்து கொடுத்தார். பொதுவாக ஒரு திட்டம் வரவேண்டும் என்று சொன்னால் மெட்ரோக்கு என்று ஒரு பாலிசி இருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/20/nainar-mks-metro-issue-2025-11-20-15-11-23.jpg)
அதன்படி மினிமம் 20 லட்சம் மக்கள் தொகை வேண்டும். மெட்ரோ ஸ்டேஷன் வேண்டும் என்றால் 22 மீட்டர் அகலம் வேண்டும் என்பது எல்லாம் சிஸ்டத்தில் இருக்கிறது. ஆனால் இவர்கள் வேண்டும் என்றே இந்த டி.பி.ஆர். ரிப்போர்ட்டை மத்திய அரசு அனுப்பவே இல்லை. பாரதி ஜனதா ஆளக்கூடிய மாநிலத்திலயும் உதாரணத்துக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் இதே மாதிரி டி.பி.ஆர். ரிப்போர்டை ரிஜெக்ட் பண்ணவில்லை. டீடைலா ரிப்போர்ட் ரிட்டன் கேட்டுள்ளனர். அதாவது இதே மாதிரி ரிட்டன் கேட்டு திருப்பி அதே இடத்திற்கு அங்கே மெட்ரோ ரயில் கொடுத்திருக்கிறார்கள்.
அதே மாதிரி இவர்கள் ஒட்டுமொத்தமா ரிஜெக்ட் பண்ணவில்லை. இது தொடர்பாக வலியுறுத்த வேண்டும். ஆர்பாட்டம் நடத்தக்கூடாது. ஒரு ப்ராஜெக்ட் போடும் போது பூஸ்ட் பண்ணி கொடுக்க தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு (கோவை மக்களுக்கு) வேண்டும் என்றே கொடுக்க கூடாது என நினைக்கிறார்கள். ஏன் தெரியுமா?. கோயம்புத்தூர், கொங்கு மண்டலத்திற்கு கொடுக்க கூடாது என்ற நோக்கத்தில் தான் ரிப்போர்ட்ட அனுப்பி இருக்கிறார்கள். நேற்று சொல்லிருந்தால் நான் பிரைம் மினிஸ்டர் கிட்ட நேரடியாக இது தொட்ர்பான கோரிக்கையை அவர் கையில் கொடுத்திருப்பேன். இது பெரிய மேட்டர் ஒன்னும் கிடையாது சார். இது அரசியல் ஆக்குறாங்க அவ்வளவுதான். 2026 ஜூன் நாங்கள் செய்து காட்டுகிறோம் சார்” எனத் தெரிவித்தார்.
Follow Us