தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் - நடிகை திரிஷா ஆகியோரை தொடர்புபடுத்தி பேசியது சர்ச்சைக்குள்ளானது. நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழக பெண்களிடம் நயினார் நாகேந்திரன் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்
இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் இன்று (16.02.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “41 பேர் இறந்து போனார்கள் அதற்குத் தமிழக அரசும், விஜய்யும் காரணம். 12 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு 7 மணிக்கு வருகிறார். குடிக்க தண்ணீர் கூட ஏற்பாடு செய்யவில்லை. அதே மாதிரி இப்போது (சேலம்) கூட ஒருத்தர் இறந்து போய்விட்டார். எல்லா கூட்டத்திலும் இறந்து போவது நல்ல சகுனம் தானே?” எனப் பேசினார். அதன் தொடர்ச்சியாக அவரிடம் செய்தியாளர் ஒருவர், “நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் சொல்லியிருக்கிறார்?” எனக் கேள்வி கேள்வி எழுப்பினார். அதற்கு நயினார் நாகேந்திரன், “என்னை பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் யாருடைய மனதும் புண்படக்கூடாது என்று நினைக்கக்கூடியவன். அவ்வளவுதான்” எனப் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர், “த.வெ.க. தலைவர் விஜய், அவருடைய கூட்டங்களில் கொள்கை என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார்?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, “விஜய்க்கு ஏதாவது கொள்கை இருக்கிறதா?. அவர்களுக்கு இருக்கிற கொள்கையை ஒரு புத்தகத்தின் மூலம் இது எங்களுடைய கொள்கை. இந்த கொள்கைக்கு மாறானது பாரதிய ஜனதா கட்சி என்று சொன்னால் பரவாயில்லை. கொள்கை என்று வெறும் பேப்பரில் மட்டும் எழுதி வைத்திருந்தால் எப்படி அதை ஒத்துக்கொள்ள முடியும்? ” எனக் கேள்வி எழுப்பினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/16/nainar-pm-2026-02-16-11-53-30.jpg)