Advertisment

“துக்கடா கட்சி என்று அமமுகவை நாங்கள் நினைக்கவில்லை..” - நயினார் நாகேந்திரன்

Untitled-1

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அமமுக திடீரென  கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அமித்ஷாவின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகும் முடிவை அறிவித்தார்.

Advertisment

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசரமான முடிவு அல்ல; நிதானமாக எடுக்கப்பட்ட முடிவு. அரசியலை நான் வியாபாரமாகப் பார்க்கவில்லை. எங்களை ஒரு துக்கடா கட்சியாக பாஜக நினைத்தது. நாங்கள் யாரை எதிர்த்து கட்சி தொடங்கினோம் என்பது பாஜகவிற்கு நன்றாகத் தெரியும். அம்மாவின் கட்சியில் உள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும், அமமுகவை டெல்லியில் உள்ள தலைமை மீண்டும் என்.டி.ஏ. கூட்டணிக்கு அழைத்துவிடும் என்று நம்பினால், அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அமமுக மீண்டும் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர, எங்களுக்கு உள்ள இடர்பாடுகளை பாஜக களைய வேண்டும். இது டிடிவி தினகரன் மட்டும் எடுத்த முடிவு அல்ல; அமமுக தொண்டர்களின் முடிவு.

Advertisment

முன்னாள் பாஜக தலைவர் இருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது. ஆனால், நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் சரியில்லை. பாஜக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரனே காரணம். அதிமுகவிற்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையிலான பிரச்சனையை நயினார் நாகேந்திரனால் சரியாகக் கையாள முடியவில்லை,” என்றார்.

இதுகுறித்து பதிலளித்த  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “அமமுகவை எப்படி வெளியே போகச் சொல்ல முடியும்? எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும். நான் பதவி ஏற்பதற்கு முன்பிருந்தே, டிடிவி தினகரனும் அமமுகவும் என்.டி.ஏ. கூட்டணிக்கு வேண்டும் என்று கூறி வருகிறேன். நாங்கள் அமமுகவை ஒருபோதும் துக்கடா கட்சியாக நினைக்கவில்லை. எங்கேயும் நான் ஆணவமாக பேசவில்லை. டிடிவி தினகரனும் ஓ. பன்னீர்செல்வமும் பேசி வைத்துக்கொண்டு பேசுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. டிடிவி தினகரன் கூறியவற்றுக்கு நான் பொறுப்பாக முடியாது. அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை” என்றார்.

b.j.p ammk k.a.sengottaiyan TTV Dhinakaran edappadi k palaniswami nainar nagendran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe