Advertisment

“சி.பி.ஆர்.க்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முழு ஆதரவையும் வழங்க வேண்டும்” - நயினார் நாகேந்திரன்!

nainar-cpr-mks

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்குகான ஆதரவு கோரி தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு வேண்டுகோள்களை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இந்தியா கூட்டணியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். 

Advertisment

தென் இந்தியாவில் இருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும். இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2022இல் நமது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த போது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளை தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

Advertisment

நவின் பட்நாயக்குக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவிற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு முதல்வர் மு. க. ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

dmk b.j.p CP RADHAKRISHNAN nainar nagendran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe