தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலை நிமிரத் தமிழனின் பயண யாத்திரையின் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று (04.01.2026) நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமித்ஷா பங்கேற்றார். அதில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக, தன்னுடைய மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு ஒரு மிகப்பெரிய ஒரு கூட்டணியை உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு போலியான கூட்டணியை இன்றைக்குப் பத்திரிகையிலே காட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா உருவாக்கிய கூட்டணி என்பது ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி. ஆட்சி மாற்றம் வந்தே தீரும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்ல திருப்பரங்குன்றத்திலே ஒரு சம்பவம். அமாவாசை தினத்தன்று தீபத் தூணிலே தீபம் ஏற்ற வேண்டும் பூரண சந்திரன் தன்னுடைய உடலிலே தீ வைத்து மாய்த்துக் கொண்டான் என்று சொன்னால் அதற்கு திமுகவே காரணம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே காரணம் என்பதை நான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அது மட்டுமல்லாமல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநெல்வேலிக்குச் செல்கிறார். கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுகிறார். நாங்களும் கிறிஸ்மஸ் விழா கொண்டாடுகிறோம். பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சிக்கு சென்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுகிறார். எல்லோரையும் மதிக்கிறோம். எல்லா மதத்தையும் மதிக்கிறோம். இஸ்லாமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி மதச்சார்பின்மையை உண்மையாக கடைப்பிடிக்கக் கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி என்பதை நான் கொல்ல கடமைப்பட்டுள்ளேன்” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/04/nainar-speak-2026-01-04-23-46-03.jpg)