Nainar Nagendran said We are not putting pressure on the AIADMK
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (09-01-26) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது அதிமுகவிடம் பா.ஜ.க ஆட்சியில் பங்கு கேட்பதாகக் கூறப்பட்டது.
அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிய போது பா.ஜ.கவுக்கு 56 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அமித் ஷா கேட்டதாகக் கூறப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசியிருப்பது வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. கூறப்பட்டது.
இந்த நிலையில், ஆட்சியில் பங்கு கேட்கவில்லை என்று தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர். தேர்தல் முடியவேண்டும், தேர்தல் முடிந்த பின் யாரெல்லம் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் இப்போதே யார் யாரெல்லாம் அமைச்சர் ஆவார்கள் என்பதை சொல்வது?.” என்று கூறினார். பா.ஜ.க சார்பில் அமைச்சரவையில் இடம்பெறுவார்களா என்று கேள்விக்கு அவர், “அதை பிறகு பார்ப்போம்” என்று கூறினார்.
தொடர்ந்து அமைச்சரவையில் பங்கு கொடுக்க வேண்டும் என்று அதிமுகவுக்கு பா.ஜ.க அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று நாங்கள் இதுவரைக்கும் யாருக்கும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை” என்று கூறினார். தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, “இதுவரைக்கும் நடத்தப்படவில்லை. தமிழகத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எங்கள் கூட்டணிக்கு முதற்கட்டமாக அன்புமணிக்கு வந்திருக்கிறார். பொங்கல் முடியட்டும் இன்னும் சில பேர் வருவார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று தெரிவித்தார்.
Follow Us