தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் குறிப்பாக அரசியல் கட்சிகள் தீவிரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

அந்த வகையில், கடந்த 23ஆம் தேதி மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதில் அதிமுக சார்பில் பா.ஜ.கவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட உள்ளதாகத் தகவல் வெளியாகின. மேலும், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பது குறித்து பேசப்பட்டதாகவும், அமமுகவுக்கு 6 இடங்களும், ஓபிஎஸ்ஸுக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.

Advertisment

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (25-12-25) கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பியூஸ் கோயல் தமிழ்நாட்டுக்கு வந்தது உண்மை, எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது உண்மை. அதன் பிறகு வெளியான செய்திகள் எல்லாம் உண்மை இல்லை. கூட்டணியாக தேர்தலை எப்படி சந்திப்பது, இப்போது கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து விவாதம் மட்டும் தான் நடந்தது. இது தவிர சீட் ஒதுக்கீடு பற்றியோ, தொகுதிகள் பற்றியோ பேசவில்லை. ஓபிஎஸ்ஸும், டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியே தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்று தவெக தலைவர் விஜய் தொடர்ந்து கூறி வருகிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அவர் எதுவேண்டுமானாலும் சொல்லிட்டு போகலாம். இந்தியாவையே நான் நாளைக்கு ஆளுவோம் என்று கூட சொல்லலாம். இது சினிமா இல்லை. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும், வேட்பாளரை நியமிக்க வேண்டும், போடக்கூடிய வேட்பாளர் விலை போகாமல் இருக்க வேண்டும், பூத் பொறுப்பாளர் விலை போகாமல் இருக்க வேண்டும். அவர்களுக்கு பூது பொறுப்பாளர்களே கிடையாது, கட்டமைப்பே கிடையாது. அவரால் யார் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? 234 தொகுதிகளில் 10, 15 வேட்பாளரின் பெயரை அவரால் வரிசையாக சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். நான் அவரை குறை சொல்லவில்லை. அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கு, நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் பா.ஜ.க மிகப்பெரிய கட்சி, 1657 எம்.எல்.ஏக்கள், 272 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மூன்று முறை முதல்வராக இருந்தவர் மூன்று முறை பிரதமராக இருந்து மிகப்பெரிய சக்தியாக இருக்கும் நரேந்திர மோடியின் புகழும், அவருடைய பெருமையும் திறமையும் எங்கே இருக்கிறது? நம்முடைய தமிழ்நாட்டில் ஒரு சினிமா நடிகராக தம்பி விஜய் எங்கே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்” என்று கூறினார். 

Advertisment