புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில் இன்று (09.12.2025) காலை 11.00 மணியளவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி பிரச்சார வாகன பேருந்தில் நின்றபடியே காலை 11.25 மணி அளவில் விஜய் பேசினார்.
அதில், புதுச்சேரியில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் அரசை பாராட்டியும், கூட்டணியில் இருக்கும் பா.ஜ.கவை விமர்சித்தும் பேசியிருந்தார். மேலும், திமுக அரசை குற்றச்சாட்டியிருந்தார். குறிப்பாக, கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிப்பதாக விஜய் குற்றம் சாட்டியிருந்தார். விஜய்யின் பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நயினார் நாகேந்திரனிடம், விஜய் மத்திய அரசை குற்றம் சாட்டியிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவருக்கு அரசியலைப் பற்றி எதாவது தெரியுமா? நாடு முழுக்க விவசாயிகளுக்கு ரூ.6,000 கொடுக்கின்ற அரசு மத்திய அரசு. சென்னையில் இருந்து கன்னியாகுமரி, சென்னையில் இருந்து பெங்களூர் என நாடு முழுக்க நான்கு வழிச்சாலை போடுகிறோம். ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் நாட்டினுடைய கட்டமைப்பு மேம்பட வேண்டும். வாஜ்பாய் காலத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி வரை அந்த கட்டமைப்பை செய்து வருகிறார்கள்.
ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் நாடு முழுக்க வீடு கொடுக்கிற திட்டம் பா.ஜ.க கொண்டு வந்தது. இது நீங்கள் சொன்ன நபருக்கு தெரியுமா? ஜல்ஜீவன் திட்டம் மத்திய அரசு கொண்டு வந்தது. இது நீங்கள் சொன்ன அந்த ஆளுக்கு தெரியுமா? எதுவும் தெரியாது. ஒரு கவுன்சிலர் கூட ஆகாதவர், நேரடியாக முதலமைச்சர் சீட்டில் உட்கார வேண்டும் என்றால் எப்படி முடியும்?” என்று விமர்சினம் செய்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/09/vijaynainar-2025-12-09-20-25-53.jpg)