Advertisment

“விஜய் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க வேண்டியது தான்” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

vijaynayi

Nainar Nagendran criticized tvk leader Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இன்று (02.02.2026) காலை முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது.

Advertisment

இந்த விழாவின் போது, பாடகர் வேல்முருகன், “தளபதி வாழ்க தளபதி வாழ்க...” என்ற பாடலை பாடினார். அதன் பின்னர் பாடகர் வேல்முருகனுக்கு, விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து வேல்முருகன் வேண்டுகோளுக்கு இணைங்க வேல்முருகன் மற்றும் அவரது மகளுடன் சேர்ந்து விஜய் சிறிது நேரம் நடனம் ஆடினார். இந்த விழாவில், தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும், பா.ஜ.க தலைமையில் மற்றும் பலர் கூறி என்று அதிமுக பெயரை சொல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விமர்சித்தார். இது குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யை விமர்சனம் செய்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரனிடம், விஜய்யின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தம்பி விஜய்க்கு ஒன்னுமே தெரியாது என்று நினைக்கிறேன். அவர் இன்றைக்கு டான்ஸ் ஆடிட்டு இருக்காரு. 3வது துவக்க விழாவில் டான்ஸ் ஆடி ஆடிட்டு இருக்காங்க. நாட்டினுடைய ஒரு கட்சியுடைய தலைவராக இருந்து தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்ன என்பது தெரியாமல் டான்ஸ் ஆடிட்டி இருக்காரு. டான்ஸ் ஆடிட்டு இருந்தால் ஆடிக் கொண்டிருக்க வேண்டியது தான். பா.ஜ.க, அதிமுக, த.மா.க, பாரிவேந்தர் கட்சி, என எல்லாமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறது. இது கூட தெரியாமல் பேசிக் கொண்டிருந்தால் எப்படி?” என்று கூறினார். 

nainar nagendran tvk vijay vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe