ஆளுநர் இல. கணேசனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்து வருபவர் இல. கணேசன். இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்குத் தலையில் அடிப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆளுநர் இல. கணேசன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக தமிழக பாஜகவின் தலைவராக இல. கணேசன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/08/nagaland-governor-l-ganesan-2025-08-08-10-08-34.jpg)