கோவை விமான நிலையம் அருகே, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (02.11.2025) இரவு ஆண் நண்பருடன் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்களால் கல்லூரி மாணவி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் சட்டவிரோத மதுபான பார் இயங்கி வந்ததாக புகார் எழுந்தது. இதை அறிந்து அங்கு வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாரில் இருந்த மது பாட்டில்களை கைப்பற்றி உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார் அவரிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சட்டவிரோத பாரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு காரணம். இதை நடத்தியது யார்? என கேள்விகளை முன் வைத்து அங்கிருந்த மதுபாட்டில்களை நாம் தமிழர் கட்சியினர் போட்டு உடைத்தனர்.

Advertisment