'naam tamilar party are the only party with real vote share in Tamil Nadu' - Karthi Chidambaram's sensational interview Photograph: (congress)
2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் நிர்வாகி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்பொழுது 'காங்கிரஸில் சமீப காலமாக குழப்பம் இருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா?' என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ''ஒரு குழப்பம் கிடையாது. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வாடிக்கையாக இருக்கின்ற எதிர்பார்ப்புதான் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கிறது. தேர்தலில் நிக்கிற கட்சிகள் எல்லாம் என நினைக்கும் எங்களுக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும்; அதிக பிரதிநிதிகள் ஜெயிக்க வேண்டும்; ஜெயித்தால் நாங்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் இந்த எண்ணத்தோடு தான் அரசியல் கட்சிகள் இருக்கிறது. இந்த எண்ணம் இல்லாமல் எந்த அரசியல் கட்சியாவது இருக்கிறதா? இது ஒன்று புதிய சிந்தனை கிடையாது உலகத்திலேயே முதன் முறையாக உதித்த சிந்தனையா?
கட்சி என ஒன்று தேர்தலில் நின்றால் அதிக இடங்களின் நிற்க வேண்டும்; அதிக இடங்களில் ஜெயிக்க வேண்டும்; ஜெயித்து ஆட்சிக்கு வர வேண்டும் இதற்கு தானே அரசியல் கட்சிகள் இருக்கிறது. இல்லையென்றால் லைன்ஸ் கிளப், லோட்டரி கிளப் மாதிரி போய் விடுவோமே. இது ஒன்றும் புதிய சிந்தனை கிடையாது. இது முதன்முறையாக யாருக்கோ உதித்த சிந்தனை கிடையாது. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வாடிக்கையாக இருக்கின்ற ஒரு எதிர்பார்ப்பு. 2026 தேர்தலில் காங்கிரஸுக்கு பல எதிர்பார்ப்புகள் இருக்கும் என ஏற்கனவே நான் சொன்னேன். காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல ஜனநாயகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கும் ஒரு யதார்த்த எதிர்பார்ப்பு தான்.
முன்னாடி எல்லாம் அதிமுக என்பது ஒரு பெரிய கட்சி. நான் மரியாதை வைத்திருந்த பெரிய கட்சி. நல்ல சின்னம் கொண்ட கட்சி. கிராம அளவில் நல்ல பரவி இருந்த கட்சி. ஆனால் இப்பொழுது அதிமுக தலைமை எதற்கெடுத்தாலும் டெல்லிக்கு போவது என்பது அவர்களிடம் பவர் சென்டர் சிப்ட் ஆகிவிட்டது. முழுக்க முழுக்க பாஜகவினுடைய துணை கட்சியாக மாறி விட்டார்கள். பாஜக வளர்ந்து வருகிறது என எதை வைத்து சொல்கிறீர்கள். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தனியாக நிற்கின்ற ஒரே கட்சி நாம் தமிழர் மட்டும் தான். அவர்களுக்கு மட்டும்தான் வாக்கு வங்கி எவ்வளவு இருக்கிறது என தெளிவாக சொல்ல முடியும். மற்ற எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் எல்லோரும் கூட்டணியோடு தான் இருக்கிறார்கள். அவர்களுடைய வாக்கு வங்கி எவ்வளவு என்று தெரியாது. எனவே பாஜக வளர்கிறது என்பதை எந்த அளவை வைத்துச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை'' என்றார்.
Follow Us