Mysterious people vandalized the panchayat office and Documents looted
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு அலுவலக பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ஊராட்சி மன்ற நடவடிக்கைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கனிணி மற்று அங்கிருந்த கோப்புகளை உடைத்து சூறையாடி நாசம் செய்துள்ளனர். கனிணி பொருட்களை வெளியிலும் வீசிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து நேற்று காலை ஊராட்சி மன்ற அலுவலகம் சென்ற ஊராட்சி செயலர் பொருட்கள் சூறையாடியுள்ளதைப் பார்த்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, வங்கி அருகில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் கும்மாளம் போடுவது வழக்கமாக உள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சிகரெட் துண்டுகளே அதிகமாக கிடக்கும். இப்படி சமூகவிரோதிகள் கூடுகிறார்கள் என்ற பிறகும் கூட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொறுத்தவில்லை. இதனை சமூகவிரோதிகள் சாதகமாக பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஏற்கனவே ஊராட்சி நிர்வாகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படி செய்திருப்பார்களா அல்லது ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள யாரேனும் இப்படி செய்திருப்பார்களா என்றும் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
Follow Us