பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் பதவியில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், ஆகஸ்ட் 21 அன்று மாலை, பள்ளியிலிருந்து வெளியே வந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஒருவரை, சோமந்தூர்-சித்தூர் பகுதியைச் சேர்ந்த சில மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சமத்தூர் பேருந்து நிலையம் முன்பு கூடிய பள்ளி மாணவர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தெரியாமல், இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை விசாரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டூர் காவல் நிலைய காவல்துறையினர், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாலை நேரத்தில் திடீரென பள்ளி மாணவர் தாக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.