Advertisment

என் வாக்குச் சாவடி ; வெற்றி வாக்கு சாவடி - இரண்டாம் கட்ட பரப்புரையைத் துவக்கியது திமுக!

111111

"தமிழ்நாடு தலைகுனியாது - என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" எனும் பரப்புரையின் முதல் கட்டமாக 68,463 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது (SIR)  திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் 6.8 லட்சம் பேர் BLO மற்றும் வாக்காளர்களுக்கு  உதவிட அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

Advertisment

இன்று முதல் பரப்புரையின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. அடுத்த 30 நாட்களுக்கு மாநிலம் தழுவிய தீவிரமான பரப்புரையாக மேற்கொள்ளப்பட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது திமுக தலைமை.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 10 முதல் ஜனவரி 10 வரை,  பகுதி/ஒன்றியம்/நகரம்/பேரூர் கழக செயலாளர்கள் 68,463க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச் சென்று 2026 சட்டமன்ற தேர்தலில் அந்தந்த வாக்குச்சாவடி அளவில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை வகுக்க பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை எந்தவொரு கட்சியும் செய்யாத வகையில் 1900 மேற்பட்ட பகுதி/ஒன்றியம்/நகரம்/பேரூர் கழக செயலாளர்களுடன் - 78 கழக மாவட்ட செயலாளர்கள், 33 எம்.பி.க்கள், 124 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில, மாவட்ட  குழு உறுப்பினர்கள் குழுவானது 30 நாட்களில் 68,463 வாக்குச்சாவடிகளையும்நேரடியாக பார்வையிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

6.8 லட்சம் திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களை உற்சாகப்படுத்தவும், அணிதிரட்டவும் பரப்புரை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத்திலும் தெருமுனை கூட்டங்கள், வீடு வீடாகச் சென்று கலந்துரையாடல்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயக்கங்கள் மூலம் அடித்தட்டு அளவில் கழக்கத்தினரை ஈடுபடுத்தி வாக்குச்சாவடி பலப்படுத்தப்படும்.

முன்னோடி தலைவர்கள் உட்பட அனைத்து திமுக நிர்வாகிகளும் 2021 சட்டமன்ற தேர்தலை விட கூடுதல் வாக்குகளை தங்கள் வாக்குச்சாவடியில் பெறும் வகையில் தங்களது வாக்குச்சாவடிகளை பலப்படுத்தி வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றிக்காட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

dmk anna arivalayam cm stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe