2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பயிற்சி மாநாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே தென் மற்றும் வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிறைவடைந்த நிலையில், அதனைத் தொடர்ந்து மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

Advertisment

இதேபோல், 'வெல்லும் தமிழ் பெண்கள்' டெல்டா மற்றும் மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடுகளும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த மாநாடுகளில் வாக்குச்சாவடி மற்றும் தொகுதி அளவில் பயிற்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கான 'வீடு வீடாகச் செல்லும் பரப்புரை' பயிற்சி இன்று முதல் தொடங்குகிறது.

Advertisment

வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான "என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி" பயிற்சி மாநாடு முதற்கட்டமாகச் சென்னையிலும், இரண்டாவதாகத் திருப்பத்தூரிலும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது.

பங்கேற்கும் மாவட்டங்கள் (20 கழக மாவட்டங்கள்):
 * திண்டுக்கல் கிழக்கு
 * திண்டுக்கல் மேற்கு
 * சிவகங்கை
 * மதுரை வடக்கு
 * மதுரை மாநகர்
 * மதுரை தெற்கு
 * தேனி தெற்கு
 * தேனி வடக்கு
 * விருதுநகர் தெற்கு
 * விருதுநகர் வடக்கு
 * ராமநாதபுரம்
 * தூத்துக்குடி வடக்கு
 * தூத்துக்குடி தெற்கு
 * தென்காசி வடக்கு
 * தென்காசி தெற்கு
 * திருநெல்வேலி மேற்கு
 * திருநெல்வேலி மத்திய
 * திருநெல்வேலி கிழக்கு
 * கன்னியாகுமரி கிழக்கு
 * கன்னியாகுமரி மேற்கு

Advertisment

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 20 கழக மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இந்த பிரம்மாண்ட பயிற்சி மாநாடு, 21.02.2026 சனிக்கிழமை அன்று மதுரை உத்தங்குடியில் அமைந்துள்ள ‘கலைஞர் திடல்’ வளாகத்தில் நடைபெறுகிறது.

மாநாட்டு சிறப்பம்சங்கள்:

 இந்த மாநாட்டில் சுமார் 1,90,000 வாக்குச்சாவடி நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.நிர்வாகிகள் வருகை தரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களை நிறுத்த சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விசாலமான இடவசதி செய்யப்பட்டுள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் உணவு தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களுக்குச் சிற்றுண்டி மற்றும் குடிநீர் பாட்டில் அடங்கிய பைகள், அவர்களது இருக்கைகளிலேயே முன்கூட்டியே வைக்கப்படும். மாநாட்டுத் திடல் முழுவதும் கழக அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பயணத்தை விளக்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பங்கேற்கும் அனைவருக்கும் அரசின் சாதனைப் பட்டியல் அடங்கிய சிறப்புப் புத்தகம் வழங்கப்படும்.

பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள்: 

அவசரத் தேவைகளுக்காக மருத்துவ முகாம்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. திடல் முழுவதும் குடிநீர் டேங்க் வசதிகள், போதுமான கழிவறை வசதிகள் மற்றும் தீயணைப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளன.

உணவு :

மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் ஹாட்பாக்சில் மட்டன் பிரியாணி, சிற்றுண்டி பையுடன் சேர்த்து வழங்கப்படுகிறது