சிதம்பரம் அருகே கிள்ளை கடற்கரைக்கு மாசி மகத் திருவிழாவில் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல நூற்றுக்கும் மேற்பட்ட சாமி சிலைகள் கடற்கரைக்கு வந்து மாசி மகம் திருவிழாவை கொண்டாடி செல்வது வழக்கம். அதேபோல் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராக சாமி சிலை( வைணவம்) மாசி மகத் திருவிழாவில் கிள்ளை கடற்கரைக்கு வரும் போது அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் மேளதாளம் முழங்க வரவேற்று தர்கா சமாதியில் பூஜை செய்து அனுப்பும் நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர் மற்றும் இந்து மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த ஆண்டு மாசிமக திருவிழா கிள்ளையில் மார்ச் 2, 3 தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் சிதம்பரம் சுற்றுவட்ட கிராமங்களில் உள்ள பல்வேறு சாமி சிலைகள் கடற்கரைக்கு வருகை தந்து மாசி மகம் திருவிழாவை கொண்டாடி சென்றது. இதில் ஸ்ரீமுஷ்ணம் வைணவ தளத்திலிருந்து வந்த பூவராக சாமி சிலைக்கு கிள்ளையில் கிள்ளை தர்கா டிரஸ்டி சையத் சகாப் தலைமையில் இஸ்லாமியர்கள் மற்றும் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட இந்து மக்கள் வரவேற்று அருகே உள்ள தர்காவில் பாத்தியா ஓதி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர்.
இந்த நிகழ்வு கடந்த 1892 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது என்றும் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருவது மத நல்லிணக்கத்திற்கு சான்றாக உள்ளதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/03/02/1023-2026-03-02-20-02-23.jpg)