நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடித்து வெளியாக இருந்த ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாத சூழலிலும் திரையரங்கிற்கு அருகில் விஜய் ரசிகர்கள் பேனர், கட்டவுட் வைத்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி இன்றியும், காலம் கடந்தும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் காமராஜர் பாலம் அருகே சுமார் 20 அடி உயரத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளால் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகன் கட்டவுட் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி நகராட்சி ஊழியர்கள் காவல் துறையினரின் பாதுகாப்போடு அகற்றினர்.

Advertisment

30 ஆயிரம் செலவு செய்து இதை வைத்ததாகவும், மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இன்று காலை தான் ஓரமாக வைத்த நிலையிலும் நகராட்சியினர் அனுமதி வாங்கவில்லை என அகற்றுகிறார்கள் என்று தவெகவினர் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அனுமதி வாங்க வேண்டும் என எங்களுக்கு தெரியாது என்றும், முப்பதாயிரம் செலவு செய்து வைக்கப்பட்ட பேனரை தங்களிடமே கொடுத்து விடுமாறு நகராட்சி ஊழியர்களிடம் தவெகவினர் கேட்டுக் கொண்டனர். பின்னர் அந்த பேனரை தவெக நிர்வாகிகளே கொண்டு சென்றனர். மேலும் தவெகவில் இருப்பது என்ன குற்றமா என்றும் குமுறல்களை வெளிப்படுத்தினர்.