Municipal Ward Special Meeting - Resolution passed and sent to the Chief Minister's Special Division Photograph: (cuddalore)
சிதம்பரம் நகரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வார்டு சிறப்புக் கூட்டம் 16-வது வார்டுக்கு உட்பட்ட இளமையாக்கினார் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் மூத்த நகர்மன்ற உறுப்பினருமான த.ஜேம்ஸ் விஜயராகவன் தலைமை வகித்துப் பேசினார். நகராட்சி ஆணையாளர் த.மல்லிகா நகராட்சி நிர்வாக அலுவலர் காதர் கான், இளநிலை அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மழைநீர் வடிகால் கழிவுகளை அகற்றியும், சாலைகளில் குப்பைகள் தேங்காமல் தினசரி தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும், மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும், பிரசித்தி பெற்ற இளமையாக்கினார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருநீலகண்ட நாயனார் உற்சவம் நடைபெறும் திருக்குளத்தை தூர்வாரி சீரமைக்க கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றி தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல் 33-வது வார்டு பகுதியில் சிறப்பு வார்டு கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். நகராட்சி சார்பில் சுகாதார அலுவலர் முருகேசன் மற்றும் சின்னப்பராஜ் கலந்து கொண்டனர். 33-வது வார்டுக்குட்பட்ட இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உடனடியாக சாலை வசதியை அமைத்துத் தர வேண்டும், பாதாளச் சாக்கடை திட்டத்தை வார்டுக்கு விரிவுபடுத்தி தர வேண்டும், மழை நீர் வடிகால் அமைத்தல் வாய்க்கால் பகுதியில் ரிவிட்மெண்ட் உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை தீர்மானம் நிறைவேற்றி முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பினர். இதே போல் நகராட்சியியில் உள்ள வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அக் 29-ந்தேதியும் நடைபெறுகிறது.
Follow Us