Advertisment

ரூ 1.10 கோடி மதிப்பிலான  திட்டங்களை தொடங்கி வைத்த நகர்மன்றத் தலைவர்!

nagar

Municipal Council Chairman inaugurated projects worth Rs. 1.10 crore chidambaram

சிதம்பரம் நகராட்சி பகுதியில் குளம் மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை நகர மன்றத் தலைவர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி உட்பட்ட மந்தகரை பகுதியில் உள்ள தட்சன் குளத்தை கலைஞர் நகர்பற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.95  லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி நவீனபடுத்தப்பட்டுள்ளது. அதே போல் கனகசபை நகரில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் ரூ 15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்சி இன்று (28-6-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர மன்றத் தலைவர் கே.ஆர். செந்தில்குமார் கலந்துகொண்டு தட்சன் குளம் மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

Advertisment

இந்நிகழ்சியில் நகராட்சி ஆணையாளர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர், இந்துமதி அருள், ஏ ஆர் சி மணிகண்டன், அசோகன், சரவணன், தில்லை மக்கின், திமுக நகர துணை செயலாளர்  பாலசுப்ரமணியன், இளங்கோவன், இளைஞரணி அமைப்பாளர் மக்கள் அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

chairman Municipal Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe