பெண் கருக்கள் என்பதால் ஒரு பெண்ணின் கர்ப்பத்தை இரண்டு முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு, பின்னர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க மாமனார் மற்றும் மைத்துனருடன் உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேசம் மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் மேஹக் கான் என்ற பெண். இவர் கடந்த 2021இல் ஷா ஃபஹீத் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த சில நாட்களிலேயே ஷா ஃபஹீத்தும், அவரது குடும்பத்தினரும் ஒரு காருடன் பல லட்ச ரூபாய் வரதட்சணையாகக் கேட்கத் தொடங்கியுள்ளனர். அதனை மேஹக் கானின் குடும்பத்தினர் கொடுக்க முடியாததால், மேஹக் கானை ஃபஹீத்தின் குடும்பத்தினர் துன்புறுத்த தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதால் மேஹக் கானின் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையில், மேஹக் கான் கர்ப்பமாகி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். பெண் குழந்தையை பெற்றெடுத்ததால் ஃபஹீத்தின் குடும்பத்தினர் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் அவர்கள் மேஹக் கானை, மேலும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து சில மாதங்கள் கழித்து மேஹக் கான் மீண்டும் கர்ப்பமானார். அப்போது குழந்தையின் பாலினத்தை அறிய சட்டவிரோதமாக ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அதில், பெண் கரு என்று தெரியவந்ததால் அந்த கருவை கலைக்க ஃபஹீத்தின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியுள்ளனர். அதே போல், மீண்டும் கர்ப்பமாகி ஸ்கேன் செய்யப்பட்ட போது பெண் கரு என்று தெரியவந்தது. அதனால் மீண்டும் கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால், மேஹக் கான் இரண்டு முறை கருக்கலைப்பு செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து, ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க தனது மாமனார் மற்றும் மைத்துனருடன் உடலுறவு கொள்ளுமாறு ஃபஹீத்தின் தாய், மேஹக் கானை கட்டாயப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கொடூரத்தை அனுபவித்து வரும் மேஹக் கான் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளார். மாமனார் மற்றும் மைத்துனரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் குறித்து தனது கணவரிடம் மேஹக் கான் தெரிவித்துள்ளார். ஆனால், அதை அவர் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு பிறகு, வரதட்சணை கொடுக்கும் வரை வீட்டுக்கு வர வேண்டாம் என மேஹக் கானையும் அவரது மகளையும் ஃபஹீத்தின் தாய் வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.

Advertisment

இதில் மன உளைச்சல் அடைந்த மேஹக் கான், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், மேஹக் கானின் கணவர் ஃபஹீத், அவரது மாமியார், மைத்துனி, மைத்துனர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.