Advertisment

‘நிம்மதியாக தூங்க முடியவில்லை...’ - 3 மாத பெண் குழந்தையின் உயிரை பறித்த தாய்!

sisu

Mother arrested for massacre three-month-old baby girl by throwing her into a water tank

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மேல்தளத்தில் வசித்து வருபவர் அக்பர் பாஷா - அர்ஷியா தம்பதியினர். அக்பர் பாஷா தனியார் தொழிற்சாலையில் கார் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அர்ஃபலா பாத்திமா என்ற பெண் குழந்தை பிறந்தது.

Advertisment

இந்நிலையில் அர்ஷியாவின் மாமியார், பல் வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது குழந்தை காணாமல் போய் இருப்பது கண்டு மருமகளிடம் கேட்டுள்ளார். அரிஷ்யா மற்றும் அவருடைய மாமியார் வீட்டில் தேடி வந்த நிலையில், தரைத்தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் பார்ப்போம் என்று அர்ஷியா கூறி தண்ணீர் தொட்டியை திறந்து உள்ளார். அப்போது அதில் குழந்தை இருந்ததை கண்டு மாமியார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

Advertisment

தகவலறிந்து சம்பவ இடத்துககு விரைந்து சென்ற நகர போலீசார் மேல்மாடியில் வசிக்கும் குழந்தை, நடக்க கூட முடியாத நிலையில் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் எப்படி விழுந்தது என சந்தேகித்தின் பேரில் கேள்வி எழுப்பினர். பின்னர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து குழந்தையின் தாய் அர்ஷியாவிடம் விசாரணை மேற்கொண்டதில், குழந்தையால் தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, குழந்தையை பார்த்துக்கொள்ள முடியவில்லை, எனக்கு கஷ்டமாக இருந்தது. இதனால் குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே, தன்னுடய  3 மாத பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்த சம்பவம் ஆம்பூரில் பெறும் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

mother police Thirupattur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe