திருநெல்வேலி மாவட்டம் முன்னீர் பள்ளம் அருகே உள்ள ஆரைக்குளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சகாரியா (வயது 66). இவரது மனைவி மெர்சி (வயது 57). இந்த தம்பதியர் தங்களது இளைய மகன் கார்லி பினோவுடன் (வயது 27) மூவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் மூவரும் வசித்து வந்த வீட்டில் இன்று (24.08.2025) மாலை உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திக் கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாளையங்கோட்டை தீயணைப்புப்படை வீரர்கள் 3 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தாய் மெர்சி மற்றும் மகன் பினோ ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் சகாரியாவிற்கு உடலில் 90% தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் குடும்பப் பிரச்சனை குடும்ப பிரச்சனை காரணமாக சகாரியா, அவரது மனைவி மற்றும் மகன் மீது பெட்ரோல் ஊற்றி தானும் தீ வைத்துக் கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் எதன் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது. என்ன பிரச்சனை என்பது குறித்து போலீசார் தரப்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் இந்த சம்பவத்திற்கான உண்மைக் காரணம் என்ன என்பது குறித்துத் தெரியவரும். குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மகன் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/24/inves-1-2025-08-24-18-24-11.jpg)