பெற்ற தாய், தந்தையை மகனே கொலை செய்து பல துண்டுகளாக்கி பையில் கொண்டு சென்று  ஆற்றில் வீசிய சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்பூர் ஜெராபாத் பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றிற்கு பெண் ஒருவர் கடந்த 13ஆம் தேதி பதட்டத்துடன் ஓடி வந்துள்ளார். தன்னுடைய தாய் மற்றும் தந்தையை காணவில்லை. தேடிச்சென்ற சகோதரன் அம்பேஸ்சும் காணவில்லை. அம்பேஸின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலையும் போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அம்பேஸை பிடித்து விசாரித்ததில் தந்தை ஷியாம் பகதூர், தாய் பபிதா ஆகியோர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

Advertisment

இந்த சம்பவத்தின் பின்னணியில் என்ஜினியராக பணிபுரிந்து வந்த அம்பேஸ் வேற்று மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரையும் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என தாயும் தந்தையும் தெரிவித்துள்ளனர். இதனால் அம்பேஸ் தன்னுடைய மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் தொடர்ந்து பெற்றோர் வேற்று மதத்தைச் சேர்ந்த அந்த பெண்ணை விட்டு விட்டு வீட்டுக்கு வா என தெரிவித்து வந்துள்ளனர்.

143
up Photograph: (police)

இதற்கு சம்மதம் தெரிவித்த அம்பேஸ் மனைவியை விட்டு பிரிந்து வந்துள்ளார். அதற்காக 5 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம்  கேட்டுள்ளார் அம்பேஸின் மனைவி. தன்னிடம் அவ்வளவு தொகை இல்லாததால் தந்தையிடம் ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்குமாறு அம்பேஸ் கேட்டுள்ளார். ஆனால் தந்தை ஷியாம் பகதூர் பணம் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

நீங்கள் சொல்லியதை கேட்டுத் தான் என் மனைவியைப் பிரிந்து வந்தேன். இப்பொழுது பணம் கொடுக்கவில்லை என்றால் நான் என்ன செய்வது என அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை ஷியாம் பகதூரை அம்பேஸ் கடுமையாக தாக்கியுள்ளார். தடுக்க வந்த தாயையும் தாக்கியுள்ளார். இருவரையும் சம்பவ இடத்திலேயே கொலை செய்த அம்பேஸ், போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என யோசித்து இருவரின் உடல்களையும் வீட்டில் இருக்கும் ரம்பத்தை பயன்படுத்தி துண்டு துண்டாக வெட்டி பையில் வைத்து பின்னர் ஆற்றுப்பகுதியில் வீசியது தெரிய வந்துள்ளது.