இறுதிச் சடங்கில் நேர்ந்த சோகம்; 20க்கும் மேற்பட்டோர்  மருத்துவமனையில் அனுமதி!

103

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நந்தகுமார் நேற்று உயிரிழந்தார். இன்று (05.08.2025) அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிலர் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துகொண்டிருந்தபோது, தீ மூட்டியுள்ளனர்.

அப்போது, அங்கிருந்த மாமரத்தில் கட்டியிருந்த மலைத் தேன் கூடு கலைந்து, தேனீக்கள் பரவி, அங்கிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோரைக் கொட்டியுள்ளன. இதில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மலைத் தேனீக்கள் பலமாகக் கொட்டியதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மூன்று பேருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆம்பூர் அருகே இறுதிச் சடங்கின்போது தேனீக்கள் தாக்கியதால் 20 பேர் படுகாயமடைந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ambur hospital
இதையும் படியுங்கள்
Subscribe