Advertisment

100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒவ்வாமை; தனியார் கல்லூரிக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு!

excel-college-collector

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பிரபல கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் பிற அண்டை மாநிலங்களான கர்நாடக, ஆந்திரா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் உள்ள மாணவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் படித்து வருகின்றனர். அதோடு கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் கடந்த 26ஆம் தேதி (26.10.2025) இரவு விடுதியில் தங்கியிருந்த மாணவ மாணவிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. 

Advertisment

அதன்படி அந்த உணவினை சாப்பிட்ட 128 மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில், பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையிலும்  சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் கல்லூரிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

Advertisment

அப்போது அங்குள்ள உணவகத்தில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய குடிநீர் மற்றும் உணவுகளில் சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதோடு, குடிநீரும் அசுத்தமாக இருந்த காரணத்தால் தான் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், “மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவு மற்றும் குடிநீரைப்  பரிசோதனை செய்ய வேண்டும். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவைச் சோதனை செய்து மாணவர்கள் வழங்க வேண்டும்.

வரும் நவம்பர் மாதம் 2ஆம் தேதி வரை எனக் கல்லூரிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.  கல்லூரி வளாகத்தைச் சீர் செய்து,  தூய்மை செய்ய வேண்டும். வெளி மாவட்ட மற்றும் மாநில மாணவர்களுக்கும், விடுதியில்  தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவுகளை உணவு பாதுகாப்புத் துறையினர் மேற்பார்வையில்  வழங்கப்படவேண்டும். அவர்கள் சோதனை செய்தபிறகு விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவு வழங்க வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

college District Collector food Hostel namakkal order private colleges
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe