தாளவாடி அருகே தொடர் அட்டகாசம் செய்து கூண்டில் சிக்கிய குரங்கை வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த அருளவாடி கிராமத்தில் கடந்த சில தினங்களாக குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு விலை உயர்ந்த செல்போனை தூக்கிக்கொண்டு வீட்டின் மேல் அமர்ந்து போக்கு காட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. நேற்று முதியவர் மற்றும் மேலும் நான்கு பேரை கடித்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு புகார் அளித்த நிலையில் கூண்டு வைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அருளவாடியைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் வைத்திருந்த கூண்டில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட வந்த குரங்கு சிக்கியது. தகவலறிந்து வந்த ஜீரகள்ளி வனத்துறையினர் கூண்டில் அடைபட்டிருந்த குரங்கை மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர். தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட குரங்கு பிடிபட்டதால் அருளவாடி கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/789-2026-01-30-22-43-09.jpg)