வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள யோகா மற்றும் இயற்கை செவிலியர் கல்லூரியில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கோபூஜை செய்து, கல்லூரி மாணவிகளுடன் புது பானையில் பொங்கல் வைத்து, பொங்கல் விழாவை கொண்டாடினார். இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,
''இந்தியா பிரம்மாண்டமான வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதும் நேற்று அமெரிக்க தூதர் நம் நாட்டிற்கு வந்தது நம் நாட்டிற்கு பெருமை. இந்தியா மாதிரி ஒரு நாடு வளர்ச்சி அடைந்த நாட்டை உலகத்திலேயே பார்க்க முடியாது என்ற ஒரு கருத்தையும் சொல்லி இருக்கிறார்கள். எனவே இந்தியா மிக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அது மட்டும் அல்ல எதிரியின் பீரங்கிகளை நேரடியாக தாக்கக்கூடிய கருவிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முதல் முறையாக தயாரித்திருக்கிறார்கள் எனவே பொங்கல் விழா இயற்கைக்கு நன்றி சொல்லுகின்ற ஒரு விழா மட்டுமல்ல இன்றைக்கு வளர்ச்சிக்கான விழாவாகவும் உள்ளது. பாரத தேசம் எல்லா விதத்திலும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாரத பிரதமர் தமிழகம் வருகிறார்கள். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்துறை அமைச்சர் வந்து பொங்கல் விழாவை கொண்டாடினார்கள் அந்த வகையில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியாக அந்த பொங்கலை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பாரத பிரதமர் வரும் 23ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை பொங்கல் விழா மிக பிரம்மாண்டமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வதைப் போல தமிழகத்திற்கு நல்ல வழி பிறப்பதற்காக 23ஆம் தேதி கூட்டம் ஒரு அடித்தளமாக அமையும். பிரதமர் வருகை அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில் ஆட்சியிலும், மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. டபுள் இன்ஜின் ஆட்சி ஆந்திராவில் இருப்பதால் ஆந்திரா நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக மசூலிப்பட்டினம் துறைமுகத்தை மிக பிரம்மாண்டமாக வடிவமைத்து கொண்டிருக்கிறார்கள். நெல்லூர் ஏர்போர்ட்டர் வடிவமைத்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்த டபுள் இன்ஜின் கவர்மெண்ட் இருக்கும் போது சாத்தியமாக இருக்கிறது. அதே வளர்ச்சி தமிழ்நாட்டுக்கும் வரவேண்டும். தமிழக வளர்ச்சி அடைந்து விட்டது என்று நாம் சொன்னாலும் கூட பல தலங்களில் பின்தங்கி தான் நாம் இருக்கிறோம். அதனால் நாம் முன்னேற வேண்டும் என்ற ஒரு ஆவலோடு நாம் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மருத்துவமனையில் நடைபெற்ற கொலை சம்பவம் வருந்தத்தக்க செயல். உயிரைக் காக்கும் மருத்துவமனைகள் எல்லாம் தற்பொழுது உயிரை போக்கும் மருத்துவமனைகளாக மாறி உள்ளது வருந்தத்தக்க செயல். எனவே இந்த சம்பவங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் கொலைகள் நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்க செயல். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் நாமெல்லாம் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். பெண்களை முன்னேற்றுகிறோம் என்று சொல்லிவிட்டு அங்கன்வாடி ஊழியர்களை தொடர்ந்து போராட வைப்பதும் நல்லதல்ல. அதனால் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் .
திருப்பரங்குன்றத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று இரவு கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்துக்களுக்கு பாரபட்சமாக தமிழக அரசு நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். பொங்களுக்கு விடுமுறை முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். விடுமுறை நாட்களில் 69 சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளதைப்போல தமிழக அரசு முன்கூட்டியே கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் மக்களுக்கு அதிகமான கட்டணம் இல்லாமல் சந்தோஷமாக பயணம் செய்திருப்பார்கள்'' என்றார்.
நடிகர் விஜய் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதை பாஜக தான் காரணம் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாரே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு,
''பாஜக பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. செல்வப்பெருந்தைக்கு ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்று பேசி வருகிறார். தனது கட்சிக்குள்ளே அவரது முக்கியத்துவம் எல்லாம் குறைந்து கொண்டிருக்கிறது அதனால் அவர் தலைவர் என்பதை சொல்வதற்காக சொல்றார். சிபிஐ விசாரணைக்கு பிஜேபி தான் காரணம் என விஜய்யும் சொல்லவில்லை அவரது ரசிகர்களும் சொல்லவில்லை. ஆனால் செல்வப் பெருந்தகை மட்டும் இடையில் புகுந்து இதில் குளிர்காய நினைக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்''என்றார்.
தவெக தலைவர் விஜய் காங்கிரஸுடன் கூட்டணி செல்வாரா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''விஜய் அரசியல்வாதியாகவும் திரைப்படத்துறையிலும் உள்ளார். அவர் எந்தப் பக்கம் போகிறார் என்று தமக்கு தெரியாது. ஆனால் இன்று சிபிஐ பக்கம் சென்றிருக்கிறார்'' என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/14/a82-2026-01-14-09-19-23.jpg)